Monday, January 25, 2010

நினைவு








தளர்த்தி விட்ட கூந்தலில் அவனது நெடி ...


கண்கள் மூடி முகர்கின்றேன்..என்னுள் நிரப்பும் முயற்சியில் ..

குளிரூட்டபட்ட அறையில் நினைவு தீயின் கதகதப்பில்

என்னுளே கொஞ்சம் கொஞ்சமாக அவனது ஊடுருவல்

மீள தெரிந்தும் மீளவிருப்பம் இன்றி என் மனமும்

வெட்கமின்றி இசைந்து வரவேற்கும் ... பின் உட்சத்தில்

உன் நினைவு என்னில் நிறைந்து முட்டியதால்

வழி இன்றி என்னை விட்டு வழிந்து ஓடும்

கண்ணீர் துளிகளாய் ...

உறக்கம் இன்றி உன் நினைவில் இரவோடு உறவாடிய

கதைகள் விடிந்த பின் சொல்லும் என் தலையணையில்

படிந்த கண்ணீரின் கறைகள்...
 
 
 
                                                                                                                   ( மிள் பதிவு )

6 comments:

நட்புடன் ஜமால் said...

த்சோ த்சோ ...

S.A. நவாஸுதீன் said...

/////குளிரூட்டபட்ட அறையில் நினைவு தீயின் கதகதப்பில்

என்னுளே கொஞ்சம் கொஞ்சமாக அவனது ஊடுருவல்

மீள தெரிந்தும் மீளவிருப்பம் இன்றி என் மனமும்//////

ஃபீல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.

அனுபட்சி said...

நட்புடன் ஜமால் said...
த்சோ த்சோ ...


// இது எதுக்கு??????????

அனுபட்சி said...

NESAMITHRAN said...
:)

:):)...:)

அனுபட்சி said...

S.A. நவாஸுதீன் said...
/////குளிரூட்டபட்ட அறையில் நினைவு தீயின் கதகதப்பில்

என்னுளே கொஞ்சம் கொஞ்சமாக அவனது ஊடுருவல்

மீள தெரிந்தும் மீளவிருப்பம் இன்றி என் மனமும்//////

ஃபீல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு


நன்றி நவாஸ்...

RK.Karthikeyan said...

நிறையவே வளமான வலி இருக்கிறது உங்கள் கவிதையில்.