Monday, January 25, 2010

நினைவு








தளர்த்தி விட்ட கூந்தலில் அவனது நெடி ...


கண்கள் மூடி முகர்கின்றேன்..என்னுள் நிரப்பும் முயற்சியில் ..

குளிரூட்டபட்ட அறையில் நினைவு தீயின் கதகதப்பில்

என்னுளே கொஞ்சம் கொஞ்சமாக அவனது ஊடுருவல்

மீள தெரிந்தும் மீளவிருப்பம் இன்றி என் மனமும்

வெட்கமின்றி இசைந்து வரவேற்கும் ... பின் உட்சத்தில்

உன் நினைவு என்னில் நிறைந்து முட்டியதால்

வழி இன்றி என்னை விட்டு வழிந்து ஓடும்

கண்ணீர் துளிகளாய் ...

உறக்கம் இன்றி உன் நினைவில் இரவோடு உறவாடிய

கதைகள் விடிந்த பின் சொல்லும் என் தலையணையில்

படிந்த கண்ணீரின் கறைகள்...
 
 
 
                                                                                                                   ( மிள் பதிவு )

Thursday, December 24, 2009

HAPPY BIRTHDAY JESUS & MERRY X -MAS

 இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜீசஸ்....







கேக் சாப்பிடுங்க பா....எல்லோரும்....




நான் அலங்கரித்த கிருஸ்மஸ் மரம் பாருங்க பா.... அதுல இருக்கிற பரிசுகள் என்னை பாராட்டி கொடுத்தது ...ஹா ஹா ஹா




Jesus Pray For Us


Wednesday, December 23, 2009

ஹைக்கூ....

இனியொரு பிறவியெனில்

கத்திரிக்காவாய் படைத்து விடு

அப்படியாவது என்னுள் ஒரு

உயிர் வளரட்டும்



( சமைக்க வெட்டிய கத்திரிக்காவில் புழு)

குழந்தையில்லாதவள் புலம்பல்)

Thursday, December 17, 2009

தனிமை --2


நிசியில் என்துயில் உண்ட வெறியில்
தனிமையின் கோரத்தாண்டவம்.....
அணுக்களில் விரகத்தின் ராகமீட்டலில்
இதயத்தில் வீசும் மரணத்தின் வாடை


ஆசை ருத்திரத்தாண்டவத்தில்
மோகவதாரம் பூசிய காதல்
அங்க மேடுப்பள்ள உணர்ச்சி அடக்கலில்
அடங்கி வெட்கமின்றி அடிமைசாசனம் நீட்டும்


மூன்றாம்பால் நினைவுத்தீயில்
நரம்புகள் பிழிந்த தாபம்
அனல் மூச்சில் உருகி கண்ணீராய்
வடிந்து அறை நிரப்பும் ஈரக்கனவுகளை.....

தொழில்

கண் அங்காடியில் ஏலம் விடுகிறேன்


சதை திரட்சியின் பிண்டம்

நிசியின் நீட்சியில் எரிச்சலோடு

அழுகிறதென் மனமும்....
ஆல்ஹகால் பீடித்தவனுக்கு குறி மறைத்து

இடுக்கிய தொடை காட்டல் என் தொழில் ரகசியம்

நகக்கீறல் படாமல் தப்பித்த எதோ ஓர் நாளில்

லட்டியோடு வந்தவன் வாங்கிபோனான்

மார்பில் தூங்கிய என் வியர்வையின் காந்தி காகிதத்தை

"குழந்தையின் மருந்துக்கு பிடித்தாக வேண்டும் இன்னொருவனை "

வருகிறான் வாடிக்கையாளன் எனும் தெய்வம்