Thursday, December 17, 2009

தொழில்

கண் அங்காடியில் ஏலம் விடுகிறேன்


சதை திரட்சியின் பிண்டம்

நிசியின் நீட்சியில் எரிச்சலோடு

அழுகிறதென் மனமும்....
ஆல்ஹகால் பீடித்தவனுக்கு குறி மறைத்து

இடுக்கிய தொடை காட்டல் என் தொழில் ரகசியம்

நகக்கீறல் படாமல் தப்பித்த எதோ ஓர் நாளில்

லட்டியோடு வந்தவன் வாங்கிபோனான்

மார்பில் தூங்கிய என் வியர்வையின் காந்தி காகிதத்தை

"குழந்தையின் மருந்துக்கு பிடித்தாக வேண்டும் இன்னொருவனை "

வருகிறான் வாடிக்கையாளன் எனும் தெய்வம்

19 comments:

அடலேறு said...

நிறைய யோசிக்கவைத்தது.ஜனரஞ்சகமான கவிதை. வாழ்த்துக்கள் அனு.

ISR Selvakumar said...

கனமான வார்த்தைகளில்,
அதை விடக் கனமான விஷயம்!
இது ஒரு தீராக் கொடுமை!

பா.ராஜாராம் said...

ஐயோ!

என்ன என்ட்ரிங்க!

ஒளிமயமான எதிர்காலம்.வாழ்த்துக்கள்!

அனுபட்சி said...

அடலேறு,,செல்வகுமார்,ராஜா எல்லோருக்கும் என் நன்றி

Thilak said...

Anu,

Nalla irukku.

To be honest it took some time to understand first few lines.

Romba stronga irukku...KOnjam lighta pannunga...

நட்புடன் ஜமால் said...

வார்த்தைகளில் முகம் சுளித்தாலும்

நிஜம் வெட்க்கப்பட்டு வேதனைப்படுத்துகின்றது

[[லட்டியோடு வந்தவன் வாங்கிபோனான்

மார்பில் தூங்கிய என் வியர்வையின் காந்தி காகிதத்தை ]]

இதில் வேதனை சற்று கூடுதல்.

--------------

"குழந்தையின் மருந்துக்கு பிடித்தாக வேண்டும் இன்னொருவனை "

அவல நிலையென்றாலும்
அவள் நிலை நினைத்து கண்ணீர்த்துளி ...

சிவாஜி சங்கர் said...

சொற்கள் ஒளித்துவைத்த சூட்சுமங்கள்.. இனி அரங்கம் அதிரும்..!!

அனுபட்சி said...

ஜமால் அண்ணா சில உண்மைகள்
சுடும்....

அனுபட்சி said...

திலக் அண்ணா..இது கொஞ்சம் காரம் அதிகம்

அனுபட்சி said...

வாங்க சிவாஜி ....
நன்றி அதிர வைத்தமைக்கு

நட்புடன் ஜமால் said...

சில மட்டுமல்ல

உண்மைகள் சுடுபவையே ...

கணேஷ் said...

அருமை...கலக்கிட்டிங்க... நன்றி..

CS. Mohan Kumar said...

முகத்தில் அறைகிறது கவிதை நல்ல துவக்கம். தொடருங்கள்

S.A. நவாஸுதீன் said...

வார்த்தைகள் ஒவ்வொன்றும் அதிரடியாய் இருக்கிறது. அழுத்தமான, அடர்த்தியான வரிகள். விரசம் மறைத்து வலிகள்தான் அதிகம் தெரிகிறது.

ANU said...

குமார்,கணேஷ், நவாஸ்...உங்கள் அனைவருக்கும் நன்றி கருத்துக்களை
சொன்னதுக்கு

சத்ரியன் said...

நண்பா,

தேன் தடவிய மருந்து...! வாழ்த்துகள்.

அனுபட்சி said...

நன்றி சத்திரியன்

Anonymous said...

speechless...congrats

Anonymous said...

கண் அங்காடியில் ஏலம் விடுகிறேன்...
கவிதை முடிந்துவிட்டது...பின் வருபவைகள் பழையதாயினும் நன்று...